• Jan 07 2025

இந்த ஆண்டின் முதல் படம்! வெளியானது பூஜா ஹெக்டே நடித்த "தேவா" படத்தின் டீசர்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை பூஜா ஹெக்டே தமிழ் தெலுங்கு என சிறப்பான படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படமான தேவா திரைப்படத்தின் டீசரை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும். ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இவர் நடிப்பில் "தேவா" திரைபடம் கடந்த ஆண்டு வெளியாக இருந்தது. திகதி மாற்றத்தினால் தள்ளி போன இந்த ரிலீஸ் தற்போது இந்த மாதம் 31ம் திகதியை லோக் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான டீசர் படுபயங்கரமாக வைரலாகிவருகிறது. இந்த ஆண்டு வெளியாகும் பூஜா ஹெக்டேவின் முதல் படமாக இது அமைந்துள்ளது. மேலும் இதே ஆண்டில் 'தளபதி 69' ,'ரெட்ரோ' ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

Advertisement

Advertisement