• Jan 08 2025

பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல்! வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். ஏராளமான பாடல்கள் கொடுத்து இசையுலகில் ஜாம்பவானாக இன்றுவரை இருக்கிறார். இவரின் பிறந்த நாள் முன்னிட்டு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இத்தனை ஆண்டுகளில் 147 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரின் தனித்துவமான பாடல்களாலும், இசையாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். சமீபகாலமாக பல இசைக்கச்சேரிகளையும் நடாத்தி வருகின்றார். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று 58வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரின் பிறந்த நாள் முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


இவரின் மகன் அமீன் " தனது தந்தைக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் இமான் தனது டுவிட் பக்கத்தில் "ஒரே ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஏ .ஆர். ரஹ்மான் சார் வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் மகத்தான மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் எண்ணற்ற மெல்லிசைகளை உருவாக்க விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அத்தோடு ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகினறனர்.


Advertisement

Advertisement