• Oct 29 2025

"டியூட்" படத்துக்கு அரசியல் வட்டாரத்திலும் பாராட்டு... சமூக ஊடகத்தில் வைரலான போட்டோஸ்.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான "டியூட் (Dude)" திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் சிந்தனை மற்றும் உறவுகள் குறித்து புதிய கோணத்தில் பேசும் இப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே வைரலாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இயக்குநராகவும், நடிகராகவும் பெயர் பெற்ற பிரதீப் ரங்கநாதன், தனது தனித்துவமான கதை சொல்லும் திறமையால் தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தைப் பெற்றுள்ளார். "காமெடி, காதல்" ஆகியவற்றை கலவையாகக் கொண்டு சமூகத்தின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அவர் படங்களை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது.

“லவ் டுடே” மற்றும் "டிராகன்" படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் மத்தியில் அவரது அடுத்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இணையாக “டியூட்” படம் ரசிகர்களுக்கு ஒரு முழுமையான அனுபவமாக அமைந்துள்ளது.

திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அரசியல் வட்டாரத்திலிருந்தும் இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.


இந்நிலையில், திருமாவளவன் மற்றும் CPI முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் “டியூட்” படத்தைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்பொழுது சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement