• Oct 29 2025

ரவி தேஜாவுக்கும்- சூர்யாவுக்கும் இடையே இப்படி ஒரு நட்பா.? ஷாக்கில் ரசிகர்கள்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ ரவி தேஜா மற்றும் இளைய தலைமுறை நடிகை ஸ்ரீ லீலா இணைந்து நடித்துள்ள “மாஸ் ஐதாரா" திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா நேற்று ஹைதராபாத் நகரில் மிக விமர்சையாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. அவரின் வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

“மாஸ் ஐதாரா” ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஒரு பெரிய விழாவாகவே மாறியது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் பெருமளவில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு, ஒளி ஒலி அமைப்புகள் மற்றும் திரைச்சீலை காட்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.


நிகழ்வில் ரவி தேஜா, ஸ்ரீ லீலா, இயக்குநர், தயாரிப்பாளர் குழு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்வில் சூர்யா கலந்து கொள்வார் எனும் தகவல் கடைசி நேரத்தில் வெளியானது. ஆனால் அவர் மேடையில் தோன்றியவுடன் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் ரவி தேஜா இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் ஒன்றாக நின்று சிரித்தபடி எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

Advertisement

Advertisement