பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி கிட்ட கதிர் தாத்தா எப்புடி இருப்பாரு என்று கேட்கிறார். அதுக்கு ராஜி வீட்டில ஒரு போட்டோவில தான் பார்த்திருக்கேன் அது மட்டும் தான் எனக்கு நினைவில இருக்கு என்கிறார். அதைக் கேட்ட உடனே கதிர் அந்த போட்டோவை எடுக்க முடியுமா என்கிறார். பின் ராஜி எதுக்காக இப்ப தாத்தாவோட போட்டோவை கேட்கிற என்கிறார்.
அதுக்கு கதிர் அம்மாச்சி ஆசைப்பட்ட மாதிரி அவங்க ரெண்டு பேரும் ஒன்னா இருக்கிறமாதிரி ஒரு போட்டோ ஒன்றை வரைந்து கொடுக்கத் தான் இதை கேட்டனான் என்கிறார். அதைக் கேட்ட உடனே ராஜி சந்தோசப்படுறார். அதனை அடுத்து ராஜி அப்புடியே அப்பத்தாவோட இன்னொரு ஆசை நாங்க எல்லாரும் ஒன்னா போட்டோ எடுக்கிறது தான் அதையும் நிறைவேற்ற முடியுமா என்று கேட்கிறார்.
அதுக்கு கதிர் அது நடக்குமான்னு தெரியல என்கிறார். மறுநாள் காலையில கோமதி பாண்டியன் கிட்ட அம்மாவோட பிறந்தநாளுக்கு எல்லாரும் போகலாம் என்று சொன்னீங்க அது உண்மைதானே என்று கேட்கிறார். பாண்டியன் அதுக்கு உண்மையாவே போறோம் என்கிறார். பின் கோமதி வீட்டில இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு இந்த விஷயத்தைச் சொல்லுறார்.
மறுபக்கம் சக்திவேல் பாண்டியன் குடும்பத்தில இருந்து யாருமே கோவிலுக்கு வரக்கூடாது என்று சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த பாட்டி ஒரு நாளாவது என்ர மகளோட இருக்கணும் என்று ஆசையா இருக்கு என்கிறார். பின் வெற்றிவேல் அவங்களோட குடும்பம் வரட்டும் என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!