சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனாவுக்கு சத்தியா போன் எடுத்து மாமா ஒரு பொண்ணைக் காப்பாத்தியிருக்கிறார் அந்த வீடியோ எல்லா இடமும் வைரலாகி கொண்டிருக்கு என்கிறார். அதைக் கேட்ட உடனே மீனா சந்தோசப்படுறார். பின் அதே வீடியோயோவை அண்ணாமலையும் விஜயாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே வீடியோவில அருண் அந்த பொண்ணைக் காப்பாத்தாமல் வண்டி ஓட்டி சென்றவரை துரத்தி சென்றதுக்கு மக்கள் பேசுறார்கள்.
அதைப் பார்த்த சீதா கவலைப்படுறார். பின் முத்து பத்திரிகையாளர்களுக்கு அந்த சம்பவம் பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து அண்ணாமலை முத்துவைப் பற்றி விஜயா முன்னாடி புகழ்ந்து தள்ளுறார். அதைக் கேட்ட விஜயா அருண் செய்தது தான் சரி என்கிறார்.
அதனைத் தொடர்ந்து அருணோட அம்மா அந்த வீடியோவை பார்த்திட்டு எதுக்காக என்னோட மகனுக்கு இப்புடி ஒரு அவமானம் என்று சொல்லிக் கவலைப்படுறார். அதைப் பார்த்த சீதா எனக்கே என்ன நடக்குது என்று ஒன்னுமே புரியல என்கிறார். பின் அருணோட அம்மா என்ர மகன் வேலையில உண்மையா தானே இருக்கான் அவனுக்கு ஏன் இப்புடி ஒரு கஷ்டம் என்கிறார்.
அதனை அடுத்து வீட்டுக்கு வந்த அருண் தன்னை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்டவுடனே சீதா ஷாக் ஆகுறார். பின் அருண் இதுக்கெல்லாம் காரணம் முத்து தான் என்று கோபப்படுறார். மறுபக்கம் முத்து வீட்ட வந்தவுடனே அண்ணாமலை அவரை பாராட்டுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!