• Jan 18 2025

வாசற் கதவை திறந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! முத்துவின் நேர்மையால் களேபரம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மும்பையில் இருந்து வந்த பிசினஸ் மேன் சந்தோஷ் சாருடன் எல்லாரும் பார்ட்டியில் சந்தோஷமாக இருக்கின்றார்கள். முத்து அவருடன் மிகவும் நெருக்கமாகி விடுகின்றார். மேலும் கண்ணதாசன் பாட்டை சொல்லி இருவரும் இன்னும் க்ளோஸ் ஆகிவிட்டதோடு பாட்டு பாடி எல்லாரையும் கலகலப்பாக வைத்திருக்கின்றார்கள்.

இறுதியில் சந்தோஷ் கண்ணதாசன் ரசிகர்கள் சூதுவாது தெரியாதவர்கள், பொய் சொல்ல மாட்டார்கள் என்று சொன்னதும் முத்து சோர்ந்து விடுகின்றார். என்ன நடந்தது என்று கேட்க, தனக்கு அந்த வார்த்தை குத்திவிட்டதாகவும் நாங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். அண்ணனுக்காக தான் இப்படி பொய் நாடகம் ஆடினோம். ஆனால் அவன் நிச்சயம் உழைப்பால்  முன்னேறுவான் என்பதற்காக குடும்பமா சேர்ந்து பொய் சொன்னோம்  என்பதை போட்டு உடைத்து விடுகின்றார்.

இதனால் மனோஜ் பயத்தில் முத்துவை சாப்பிட போகுமாறு சொல்ல, முத்து நேர்மையாக இருந்ததை பாராட்டி சந்தோஷஷ் சார்  மனோஜ்க்கு அந்த பிசினஸை கொடுத்து விடுகின்றார் இதனால் எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள்.

அதன் பின்பு முத்து, ரவி, மனோஜ் ஆகியோர் தடுமாறிக் கொண்டிருக்க போகும்போது எப்படியாவது முத்துவின் போனை எடுக்க வேண்டும் என்று பிளான் போடுகின்றார் ரோகிணி. அதன்படி லிப்டில் வைத்து முத்துவின் போனை எடுத்து மனோஜின் பாக்கெட்டுக்குள் போட்டு விடுகின்றார்.


வீட்டிற்கு வந்ததும் வாசக் கதவை அண்ணாமலை திறக்கின்றார். இவர்கள் மூவரும் குடித்துவிட்டு வந்ததை பார்த்து திட்டுகின்றார். அது மட்டும் இன்றி ஸ்ருதி, மீனா, ரோகிணி ஆகியோரை உள்ளே வர சொல்லிவிட்டு முத்து, ரவி, மனோஜை வெளியேவே படுத்து உறங்குமாறு சொல்லுகின்றார்.

இதை கேட்ட விஜயா மனோஜ், ரவியும் வெளியே குளிருக்குள் படுக்க மாட்டார்கள் என்று சொல்ல, அப்படி என்றால் முத்து மட்டும் தூங்குவாரா என்று மீனா கேட்கிறார்.. இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement