• Feb 23 2025

அரசியல்வாதி மகன் வீட்டில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை... கொந்தளித்த இயக்குனர் பா. ரஞ்சித்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ரேகா, அரசியல் வாதி ஒருவர் மீது தன்னை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இந்த டிசம்பவம் தற்போது மக்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மீது உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ரேகா புகார் அளித்துள்ளார். அதில் அவர், "எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து தன்னை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தினார்கள் என்றும். இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்நிலையில் இது தொடர்பாக பா. ரஞ்சித் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், "பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது".


"இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!" என்று பா. ரஞ்சித் பதிவிட்டு இருக்கிறார். 





Advertisement

Advertisement