• Jan 19 2025

லெஜண்ட் சரவணனனின் அடுத்த திரைப்பட அப்டேட் ... வேற லெவல் மாஸ் லுக்கில் வைரலாகும் புகைப்படங்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இவர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் முதலாளி ஆவார் என்பதை நாம் அறிவோம்.இந்நிலையில் தற்போது தனது புதிய திரைப்படம் தொடர்பாக அப்டேட் கொடுத்துள்ளார்.


இவர் விளம்பரம் மற்றும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின் தான் ஹீரோவாகவும் அறிமுகமாக போகிறேன் என அறிவித்தார். பிரம்மாண்டமாக தனது முதல் படத்தை தயாரித்து வெளியிட்டார். முதல் படத்தை தொடர்ந்து இதுவரை லெஜண்ட் சரவணன் தன்னுடைய படம், அதாவது இரண்டாவது படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால், தனது இரண்டாவது படம் குறித்து எப்போதெல்லாம் கேள்வி எழுகிறதோ, அப்போதெல்லாம் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் அப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் தன்னுடைய இரண்டாவது படம் குறித்து பேசியுள்ளார். இதில் "All Set for Legends Next Process Started…. Revealing Soon…" என பதிவு செய்துள்ளார். மேலும் தன்னுடைய சில லேட்டஸ்ட் புகைப்படங்களை இந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.


இதன்மூலம் விரைவில் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளிவரப்போகிறது என தெரிகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார், இசையமைக்க போவது யார், மேலும் நடிகர், நடிகைகள் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement