• Jan 19 2025

தன்னை அசிங்கப்படுத்தியவருக்கு நடிகர் அஜித் செய்த தரமான செயல்... நபர் மோசமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்  நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வருகிறது.இந்நிலையில் நடிகர் அஜித் அவர்களை அசிங்கப்படுத்திய பத்திரிகையாளர் ஒருவருக்கு நடிகர் அஜித் தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விடையம் தான் பேசப்பட்டு வருகிறது.   


மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்தை முடித்த பின், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அஜித்தை மிகவும் மோசமான வகையில் எழுதியுள்ளார். எப்போதுமே அஜித்தை மோசமாக எழுதி வந்த அந்த பத்திரிகையாளர் ஒரு நாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அப்போது சிகிச்சைக்காக ரூ. 2.5 லட்சம் கட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அஜித் உடனடியாக அந்த ரூ. 2.5 லட்சத்தை மருத்துவமனையில் கட்டியுள்ளார். தன்னை எவ்வளவு மோசமாக அந்த பத்திரிகையாளர் கூறினாலும், ஆபத்து என்ற நேரத்தில் அஜித் ஓடி போய் உதவியுள்ளார்.இந்த சம்பவத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement