விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 9, நாளுக்கு நாள் பரபரப்பையும், விவாதங்களையும் உருவாக்கி வருகிறது. இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர், சமூக வலைத்தளங்களில் பிரபலமான “வாட்டர் மெலன் திவாகர்”.
தனது வெறித்தனமான காமெடி வீடியோக்கள், இயல்பான பேச்சுகள் மற்றும் எளிமையான தோற்றத்தால் கவனம் ஈர்த்த திவாகர், தற்போது பிக்பாஸ் வீட்டில் மாறுபட்ட அனுபவத்தைக் கடந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்துகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பிக்பாஸ் வீட்டில் இருப்பது எவ்வளவு மனச்சோர்வையும், உடல் களைப்பையும் ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் விதத்தில், திவாகர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தன் அனுபவத்தைப் பகிர்ந்த திவாகர், “பிக்பாஸில தினமும் 11 மணிக்கு ஜூஸ் கிடைக்கும், சாய்ந்திரம் முட்ட பப்ஸ் வரும். ஒரு மணி நேரம் தான் ஷூட் இருக்கும். மீதி நேரம் தூங்கலாம்னு நினைச்சேன்... ஆனா, இங்க ஒரு நாள் போறது ஒரு யுகம் மாதிரி இருக்கு.. நாலு நாள்ல என் உடம்பெல்லாம் குறைஞ்சு போய்ச்சு...” என்றார்.
திவாகர், வெளியுலகில் மிகவும் சுதந்திரமாக பேசும் காமெடியனாக இருந்தவர். ஆனால், பிக்பாஸ் வீட்டின் கட்டுப்பாடுகள், எப்போது யார் பேசலாம், எப்போது யாருடன் எப்படி நடக்கலாம் என்பதைப் போல எல்லாம் திட்டமிடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர் சந்தித்த மனஅழுத்தமே இதன் பின்னணியாக அமைந்துள்ளது.
Listen News!