• Jan 18 2025

கேன்சல் ஆன தேவரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி! ஹோட்டலை அடித்து நொறுக்கிய சம்பவம்! ரசிகர்களே காரணம்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கில் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 30வது படமாக உருவாகியுள்ளது "தேவரா" திரைப்படம். இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாகியுள்ளார் ஜான்வி கபூர். அனிருத் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில் ஐதராபாத்தில் நடக்கவிருந்த இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் அதிகப்படியான ஆர்வம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேவரா படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது தெரிந்த விஷயம்தான். இந்த படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், கொரட்டாலா சிவா உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டனர். 


இன்னிலையில் தேவரா படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஐதராபாபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. மிகவும் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கேன்சல் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாகவே இந்த அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே நுழைந்ததால் கலவரம் ஏற்பட்டது. கண்ணாடி கதவுகள் தூள் தூளாகின.


கூட்டத்தை சமாளிக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்களை பார்க்கும் முயற்சியில் ரசிகர்கள் ஈடுபட்ட நிலையில் அவர்களை சமாளிக்க முடியாமல் இந்த நிகழ்ச்சியை தள்ளி வைப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மற்ற ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  



Advertisement

Advertisement