• Jan 19 2025

பாக்கியாவை பழிவாங்க அடிமட்டத்துக்கு சென்ற கோபி! இனியா போட்ட புது பிளான்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா காலேஜில் வைத்து எழிலிடம் காம்பெடிசனில் கலந்து கொண்ட விஷயத்தை சொல்லுகின்றார். ஆனால் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லுகின்றார். அந்த நேரத்தில் அங்கு ஈஸ்வரியையும் வர, எழில் பக்கத்தில் டீ குடிக்க போகலாம் என்று அழைத்துச் செல்கின்றார். அங்கு ராமமூர்த்திக்கு பிடித்த சாண்ட்விச் வாங்கி சாப்பிடுகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி முதல் இருந்து எல்லாரும் ஒன்றாக சாப்பிடும் நிலையையும் தற்போது உள்ள நிலையையும் எண்ணி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றார். அந்த நேரத்தில் பாக்கியாவுக்கு கால் வர, நாளைக்கு ரெஸ்டாரன்ட் வருமாறு சொல்லுகிறார்.

ஈஸ்வரி என்ன விஷயம் என்று கேட்கவும், புதிதாக வேலைக்கு ஒருவரை எடுக்க இருப்பதாகவும், உங்களுடன் நீண்ட நேரம் இருக்கலாம் என்பதற்காக இப்படி செய்ததாகவும் சொல்லுகின்றார். ஆனாலும் ஈஸ்வரி என்னை பார்க்க வேண்டாம் வேலையை கவனிக்குமாறு அட்வைஸ் பண்ணுகின்றார்.


மறுபக்கம் கோபியின் நண்பர் கோபியிடம் பாக்கியா மேலும் வளர்ந்து கொண்டு போவதை பற்றி சொல்லி பேப்பரில் வேலைக்கு விளம்பரம் கொடுப்பதையும் காட்டுகின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி பாக்கியாவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று தனது கிச்சனில் வேலை செய்த செஃப் ஒருவரை அங்கு வேலை செய்யுமாறு அனுப்புகின்றார். 

மேலும் பாக்கியாவிடமிருந்து மொத்த குடும்பத்தையும் பிரித்து அவரை நடுத்தெருவுக்கு கொண்டு வர எந்த அடிமட்டம் வரை செல்வேன் என்றும் சபதம் எடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement