• Apr 05 2025

இந்திய திரையுலகின் உன்னத நட்சத்திரம் மரணம்..! சோகத்தில் மூழ்கிய பாலிவுட் உலகம்...!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

ஹிந்தி திரையுலகின் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான மனோஜ்குமார் இன்று காலை மரணம் அடைந்தார் என அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இவர் தாறா சாகே பாலைக்கா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளுடன் வாழ்ந்த ஒரு மகான். மனோஜ்குமாரது மரணம் திரையுலகில் உள்ள  ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ்குமார் இந்தியர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த நடிகர். அவர் நடித்த பல படங்களில் தேசிய உணர்வு மற்றும் தேசபக்தி என்பன பிரதான கருவாக அமைந்திருந்தன. குறிப்பாக, உப்கார் , ஷோர் , ரோட்டி கபடா போன்ற படங்கள் மூலம் அவர் இந்திய திரையுலகில் தனித்துவம் பெற்றார்.


மனோஜ்குமார், 1960களில் இந்தியாவின் புதிய சமுதாய வளர்ச்சியை சினிமா வழியாக எடுத்துக் கூறியவர். நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்கத்திலும் மனோஜ்குமார் சாதனை படைத்தவர். அவரது திரைப்படங்கள் சமூக விழிப்புணர்வையும், தேசபக்தி உணர்வையும் ஏற்படுத்தக் கூடியவை. 'உப்கார்' திரைப்படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றதுடன் அவருடைய படைப்புகளை பலரும் பாராட்டினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மனோஜ்குமார் உடல்நலக் குறைவில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். அத்தகைய கலைஞர் சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததுடன் இன்று தனது உயிரைப் பிரிந்துள்ளார். இது ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement