பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி ஆகாஷைப் பாத்து எங்க உன்ர அப்பனக் காணோம் என்று கேக்கிறார். அதுக்கு ஆகாஷ் தெரியல அவர் எங்கயோ போய்ட்டார் என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து செல்வி சோகமாக இருக்கிறதப் பாத்து ஏன் அம்மா என்மேல ஏதாவது கோபமா என்று கேக்கிறார். அதுக்கு செல்வி இந்த உலகத்தில கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் தான் வாழ முடியும் என்று சொல்லுறார். அதுக்கு ஆகாஷ் ஏன் என்னாச்சு என்று கேக்கிறார்.
அதைத் தொடர்ந்து, செல்வி ஆகாஷைப் பாத்து நீ நான் சொல்லுற எதையும் கேக்கமாட்டியா என்று கேக்கிறார். மேலும் இனியாவோட நம்பர் ஏதும் இருந்தா அழிச்சிடு என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஆகாஷ் ஏன் அம்மா சம்மந்தமே இல்லாம பேசுறீங்க என்று கேக்கிறார். மேலும் இனியா கூட நான் பேசுறதே இல்ல என்று சொல்லுறார். இதனை அடுத்து செல்வி இனியாவுக்கு கலியாணம் நிச்சயம் ஆகிட்டு என்ற விஷயத்த ஆகாஷுக்கு சொல்லுறார். அதைக் கேட்டவுடனே ஆகாஷ் அழுகுறான்.
இதனை அடுத்து ஆகாஷ் இனியாவுக்கு கலியாணம் என்று யார் சொன்னது என்று கேக்கிறார். அதுக்கு செல்வி பாக்கியா அக்கா தான் சொன்னாங்க என்கிறார். மேலும் படிப்பு மட்டும் தான் உனக்கு முக்கியம் என்று ஆகாஷைப் பாத்து சொல்லுறார். அத்துடன் அது மட்டும் தான் உன்ர வாழ்க்கைக்கு முக்கியம் என்கிறார்.
அதைத் தொடர்ந்து இனியா கோபி சொன்னதை எல்லாம் ஜோசிச்சிட்டு இருக்கிறார். பின் பாக்கியா நான் உன்ன கலியாணத்துக்கு ஓகே பண்ண சொல்லலேயே என்கிறார். மேலும் இனியாவப் பாத்து நீ யாரைப் பத்தியும் ஜோசிக்காத என்று சொல்லுறார். மறுநாள் செழியன் அப்பாவுக்கு உடம்பு சரியில்ல என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா உங்க அப்பா நடிக்கிறார் என்று சொல்லுறார். இதனை அடுத்து இனியா ஹாஸ்பிடலுக்கு வந்து கோபியைப் பாத்து அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!