தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான காக்க காக்க திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் ஜீவன். இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாகவும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கின்றார். எனவே அவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.
நடிகர் ஜீவன் 1975ம் ஆண்டு ஜுலை 6ம் திகதி சென்னையில் பிறந்திருக்கின்றார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரங்கராஜ். நடிப்பதற்காகத் தான் ஜீவன் என்று பெயரை மாற்றிக் கொண்டார். தொடர்ந்து நடிகர் சூர்யாவின் கிளாஸ்மேட்டாவும் படிச்சிருக்காரு. பின்னர் மேல் படிப்பிற்காக லண்டன் சென்று படிச்சிருக்காரு அங்கு படிக்கும் போது தான் நடிப்பிற்கான ரெயினிங்கும் எடுத்திருக்காரு. அங்கு இருக்கும் போது தான் வெதர்ஸ்பூன் என்னும் பப்ல வேலை பார்த்திருக்காரு.
தொடர்ந்து யூனிவர்சிட்டி என்னும் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமாகினார். தொடர்ந்து 2003ம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தில் பண்டி என்னும் வில்லனாக நடித்து அசத்தினார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அமைய இவருக்கு நிறைய விருதுகளும் கிடைத்தன. தொடர்ந்து வில்லனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்ததாம்.
இருப்பினும் நடித்தால் ஹீரோவாத் தான் நடிப்பேன் என்று இருந்தாராம். அதன்படி 3 வருசத்திற்குப் பிறகு தோட்டா என்னும் படத்தில் நடித்தாராம். இப்படம் ரீலிஸாக தாமதமாகியதோடு இதற்கடுத்ததாக இவர் நடித்த திருட்டுப்பயலே திரைப்படம் முதலில் வெளியாகி விட்டதாம்.இப்படமும் மிகப் பெரிய ஹிட்டானதாம்.
தொடர்ந்து 2007ம் ஆண்டு வெளியான நான் அவன் இல்லை திரைப்படம் மீண்டும் ஹிட்டானதாம் தொடர்ந்து மச்சக்காரன் என சில படங்களில் நடித்தாராம்.இருப்பினும் 2009ம் ஆண்டிற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த இவர் 2015ம் ஆண்டு அதிபர் என்னும் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார்.
தொடர்ந்து ஆசாரி, ஜெயிக்கிறகுதிரை போன்ற படங்கள் நடித்திருக்கின்றாராம். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளதோடு இப்படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கின்றாராம். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!