• Nov 26 2025

Leo Producer மகன் Marriage-க்கு Class Look-ல் வந்த தளபதி விஜய் - வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.


செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்த இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். அத்தோடு இப்படத்தில்  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.


இதனை அடுத்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 


இந்நிலையில், இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது. இது ஒரு புறம் இருக்க நடிகர் விஜய் தாரிப்பாளர் லலித்தின் மகனுடைய திருமணத்திற்குச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement