• Jan 19 2025

பிக் பாஸ் பின் சந்தித்த டீம் B குரூப்... இது Ultimate Twist-uh இருக்கே! ஆனா ஒருத்தர் மட்டும் மிஸ்ஸிங்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 மிகவும் பரபரப்பாக சென்றமைக்கு முக்கிய காரணமே பிரதீப்பின் ரெட் கார்ட் வழங்கிய விடயத்தினால் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்களுள், பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணுவார் என ஆணித்தரமாக நம்பப்பட்ட ஒருவராக பிரதீப் காணப்பட்டார்.

எனினும், அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர விடாமல் திட்டம் போட்டு மாயா டீம் வெளியேற்றியது. இது தற்போது வரையில் சோசியல் மீடியாவில் புகைந்து வருகின்றது.


இதை தொடந்து பிரதீப்க்கு எதிரான டீம் A எனவும், அவருக்கு ஆதரவான போட்டியாளர்கள் டீம் B எனவும் பிக் பாஸ் வீட்டில் பிரிக்கப்பட்டு பார்க்கப்பட்டார்கள்.

பிக் பாஸ்  நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், டீம் B போட்டியாளர்களான தினேஷ், விஷ்ணு, மணி, அர்ச்சனா ஆகியோர் பேட்டி கொடுத்த நிலையில், டீம் A இல் இருந்து தற்போது தான் நிக்சன் மட்டும் பேட்டி கொடுத்து இருந்தார்.


இதனால் மாயாவின் டீம் தலை மறைவு ஆகிவிட்டது என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரவீனா, விஷ்ணு. தினேஷ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.

தற்போது அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. எனினும், இதில் ரவீனாவுடன் மணியை காணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement