• Feb 23 2025

Pradeep கிட்ட பேசிய விசித்ரா..! இது ஆக்சனா? இல்ல புது கன்டென்ட்டா? கான்வர்சேஷன் என்னவா இருக்கும்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்த ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7.

இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களுள், மிகவும் முக்கியமான ஒருவராக காணப்படுபவர் தான் நடிகை விசித்ரா. இவருக்கு பிக் பாஸ் மூலம் மிகப்பெரிய ரசிகர் குரூப் உருவானது என்றால் மிகையாகாது.


90ம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 இலை பங்குபற்றி, 50 வயதைக் கடந்து கிட்டத்தட்ட 95 நாட்கள் வரை பயணம் செய்த ஒரே ஒரு போட்டியாளராக விசித்ரா காணப்படுகிறார்.


பிக் பாஸ் டைட்டிலை விசித்ரா வின் பண்ணுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்ட போதும், இறுதி வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து, இவருக்கு வெளியில் உள்ள ரசிகர்கள் காட்டும் அன்பு வெள்ளத்தில் தற்போது வரை மூழ்கி வருகிறார் என்றே சொல்லலாம்.


இந்த நிலையில், தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்து, இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார் விசித்ரா.

அதில் ரசிகர் ஒருவர், பிரதீப் கூட பேசினீங்களா என கேட்க, அதற்கு ஆமா என பதிலளித்துள்ளார். தற்போது அவருடைய இன்ஸ்டா பதிவுகளும், பதில்களும் வைரலாகி வருகின்றது.

இதேவேளை, பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, விசித்ராவுடன் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்க, விசித்ரா சிரிப்போடு பதிலளித்து இருந்தார். இதனை நெட்டிசன்கள் வைத்து கலாய்த்தமையும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement