• Dec 03 2024

உயிர்வேணுமா வேணாமா? பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்! அவங்க திரும்ப என்ன சொன்னங்க தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஹிந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரைமா சென் ஆவார் . பெங்காலி சினிமாவில் மகாநாயகி என பெயர் பெற்ற பிரபல நடிகை சுசித்ரா சென்னின் பேத்தி ஆவார். இவர் ஹிந்தி மட்டும் இன்றி தெலுங்கு , மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஹிந்தியில் மாகாளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


விஜய் யேலகண்டி இயக்கும் இந்த திரைப்படமானது கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டே உருவாகின்றது.  குறித்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று  கடந்த 4ஆம் திகதி வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


குறித்த போஸ்டர் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை ஒன்று சேர்க்கும் விதமாக காணப்படுகின்றது. அதாவது  இந்து மதத்தை குறித்தவாறு ஒருபக்கம் காளியின் முகமும் , இஸ்லாமியரை குறித்தவாறு மற்றொருபக்கம் முஸ்லீம் பெண்ணின் முகமும் காணப்படுகின்றது. இதனால் குறித்த நடிகைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கு அவர் படத்தை முழுமையாக பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என கூறியதாகவும் தகவல் கிடைத்துள்ளன. 

Advertisement

Advertisement