• Jan 19 2025

கங்குவா படத்தின் தோல்வி.. பிரபல கோவிலில் சூர்யா செய்த யாகம்! வைரல் போட்டோஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இந்தத் திரைப்படம் மீது சூர்யாவின் குடும்பத்தார் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார்கள். ஆனாலும் படம் வெளியானதிலிருந்து தொடர்ச்சியாக நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் அதிகளவில் குவிந்தது. இதனால் இந்த படமும் வசூலில் சரிவை சந்தித்தது.

கங்குவா  படத்திற்கு தொடர்ச்சியாக நெகட்டிவ் கமெண்ட்கள் குவிந்ததை பார்த்த ஜோதிகா, சூர்யாவின் மனைவியாக மட்டுமில்லாமல் ஒரு நடிகையாக தனது  கண்டன பதிவை தெரிவித்து இருந்தார். ஜோதிகாவை தொடர்ந்து பலரும் கங்குவா  படத்தின் உள்ள பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை பகிர்ந்து இருந்தார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பலரின் கடின உழைப்புக்கு பிறகு கங்குவா படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் போது சூர்யா விபத்துக்கும் உள்ளானார். இந்த படத்தில் சூர்யாவின் கடின உழைப்பு பாராட்டப்பட்டது. மேலும் ஒரு வருடங்களுக்கு மேலாகவே கங்குவா படம் பற்றிய ப்ரோமோஷன் பணிகளும் நடைபெற்றது. கங்குவா படத்திற்கு நெகடிவ் கமெண்ட்ஸ் குவிந்ததை தொடர்ந்து திரைப்பட சங்கத்தினர் அதிரடி தடைகளையும் விதித்தார்கள்.

d_i_a

இந்த நிலையில், சென்னை சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு சிறுத்தை சிவாவுடன் சென்று சாமி தரிசனம் செய்த சூர்யா, தற்போது மனைவி ஜோதிகாவுடன் கொல்லூர் மூகாம்பிகையை வழிபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.


கங்குவா படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த நிலையில், சில கோவில்களுக்கு சென்று பரிகார பூஜைகளையும் சூர்யா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி ஜோதிகாவுடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற சூர்யா, சண்டியாகம் செய்துள்ளார். இது வாழ்க்கையில் தொடர்ந்து வரும் தடைகளை நீக்கவும் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறவும்  பிரபலங்கள் செய்யும் யாகமாக காணப்படுகின்றது. இதனை தற்போது சூர்யா செய்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement