தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படமான "ரெட்ரோ" ரசிகர்கள் மற்றும் சினிமா காதலர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றார். இப்படத்தில் மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது குறிப்பாக சூர்யா அவருடைய புதிய படத்தில் மிகவும் முக்கியமான கம்முப் பேக் செய்ய உள்ளார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். தற்போது ரெட்ரோ படத்தை பார்த்த சூர்யா தனது விமர்சனங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் பேசுகையில் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளதாவது "சூர்யா படத்தை முழுமையாக பார்த்த பிறகு, அவர் 'நல்லா வந்துருக்கு' என்று கூறியுள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்த பாசிடிவ் பார்வை எங்களுக்கு மிகவும் உதவியது." என அவர் கூறியுள்ளார்.
Listen News!