ரஜினிகாந்த் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாளத்தில் ஏற்பட்டு இருந்த வீக்கத்தை சரிசெய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி சிகிச்சை நடந்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் "ரஜினிகாந்த் 30 செப்டம்பர் 2024 அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இருதயநோய் நிபுணர் டாக்டர். சாய் சதீஷ் பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை முழுவதுமாக நீக்கினார்.
அதனால் அறுவை சிகிச்சை இல்லாமல் அதை சரி செய்துவிட்டோம். திட்டமிட்டபடி சிகிச்சை நிறைவு பெற்றது. இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பவுள்ளார்". சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ இணையத்தில் வலம்வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
#SuperstarRajinikanth சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் 👍
pic.twitter.com/kZ1YMCrTmP
Listen News!