• Jan 19 2025

மனோஜ் வாழ்க்கைல இப்படியொரு ட்விஸ்ட்டா..? ரெண்டு பாப்பா கூடவும் இணைந்து ஹாப்பி மூட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

 




விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலின் சுவாரஸ்யம் குறையாமல் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறது.

விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் வகிக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் குறுகிய காலத்திற்குள் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. 

இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் காணப்படுகிறது. கிட்டதட்ட 10 தொடக்கம் 12 கேரக்டர்களை கொண்ட இந்த சீரியல் அனைவரையும் உள்ளடக்கிய வகையில் நாளாந்தம் இதன் கதைக்களத்தை விறுவிறுப்பாக நகர்த்தி வருகின்றது.


தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் தான் தப்பிப்பதற்காக ரோகினி சத்யாவை மாட்டி விட பிளான் பண்ணுகின்றார். இதனால் முத்து, மீனாவுக்கு பிரச்சனை வரும். ஆனாலும் தான் பிஏ வின் தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம் என்று கணக்கு போட்டு இப்படி செய்ய துணிந்துள்ளார்.

அதன்படியே மனோஜ் வைத்த பார்ட்டில் முத்துவின் போனை ஆட்டையை போட்டு விடுகின்றார். ஆனாலும் இன்னும் அதிலிருந்து வீடியோவை எடுக்கவில்லை. அதில் இருந்து வீடியோவை எடுப்பாரா? சத்யாவின் உண்மை வெளி வருமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலின் வெற்றி கொண்டாட்டத்தில் மனோஜ் தனது முன்னாள் காதலியான ஜீவா மற்றும் தனது மனைவி ரோகினி உடன் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். 






Advertisement

Advertisement