• Jan 19 2025

எனக்கு விரைவில் குழந்தை பிறக்கும்.. யாருக்கும் பொறாமை என்றால் அது அவரவர் பிழை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர் கோகிலா என்ற பெண்ணை மூன்றாவது தடவையாக திருமணம் செய்து கொண்டார். 

மலையாள நடிகரான பாலா தமிழில் வீரம், அன்பு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட ஒரு சில படத்தில் தான் நடித்துள்ளார். இவர் முதலாவதாக அம்ருதா சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

எனினும் அம்ருதாவை விவாகரத்து செய்த பாலா, அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்தார். ஆனாலும் இவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை கடைசியில் இவரையும் விவாகரத்து செய்தார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் பாலாவின் முதல் மனைவி அம்ருதா அளித்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார். அது மட்டும் இல்லாமல் இவரின் மகளும் இவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். அதன் பின்பு ஜாமனில் வந்த பாலா தனது முதலாவது மனைவி அம்ருதா தனக்கு எதிராக சதி செய்வதாக தெரிவித்திருந்தார்.


இதை அடுத்து பாலாவுக்கு திருமணம் நடைபெற்றதாக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அதன்படி அவர் தனது உறவினர் பெண்ணான கோகிலா என்பவரை திடீரென திருமணம் செய்திருந்தார். மேலும் தனக்கு உடல்நிலை சரியில்லாத போது இவர்தான் தன்னை கவனித்துக் கொண்டதாகவும் இந்த வாழ்க்கை சிறப்பாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மூன்றாவது திருமணம் பற்றி பேசிய பாலா, தான் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக பலரும் என்னை விமர்சனம் செய்கின்றார்கள். திருமணத்திற்கு பெண் கிடைக்காதவர்கள் தான் என்னைப் பார்த்து பொறாமை படுகின்றார்கள். 

எனது மனைவி கோகிலாவிற்கு 24 வயது. அவர்தான் எனது கோடிக்கணக்கான சொத்தையும் நிர்வகித்து வருகின்றார். நான் ராஜா போல வாழ்வேன் என்றால் எனது மனைவி ராணி போல வாழ்வார். அத்துடன் நாங்கள் விரைவில் குழந்தையும் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றோம். எங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும். இதை பார்த்து யாராவது பொறாமைப்பட்டால் அது அவர்களுடைய தவறு என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement