தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தனது திறமையான நடிப்பால் மட்டுமின்றி, அழகான தோற்றத்தாலும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்த பிறகு, தமிழ் சினிமாவில் தனது பெயரை உறுதிப்படுத்திய இவர், மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்துக்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அது அவரது திரை பயணத்தில் முக்கிய அத்தியாயமாகும். அந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதற்குப் பிறகு பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் கவனம் பெறும் படங்களில் நடித்து வருகிறார். தனது கேரியர் வளர்ச்சியை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து, ரசிகர்களுடன் இணைந்து வருகிறார்.

அந்த வகையில், பூஜா ஹெக்டே சமீபத்தில் வித்தியாசமான ஆடையில் போட்டோஷூட் செய்து, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதும், ரசிகர்கள் விரைவில் லைக்கினைக் குவித்து, அவரது தோற்றத்தைப் பாராட்டி வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!