தமிழ் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரபலமான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளார். இதற்காக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பொலிஸில் புகார் அளித்து, தனது அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதனால் சம்பவம் தற்போது வைரலாகி, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாய் கிரிசில்டா தனது புகாரில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வழக்குத் தொடர்ந்ததுடன், தனது சமூக வலைத்தள கணக்குகளில் தொடர்ந்து அவரை விமர்சித்தும் வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பதிவில் ஜாய் கிரிசில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் DNA டெஸ்டுக்கு பயந்து ஒரு மாதமாக தலைமறைவாக உள்ளார். அவரை காணவில்லை. அவரை ஏதாவது நிகழ்ச்சியில் பார்த்தால் உடனே என்னை தொடர்பு கொள்ளுங்கள். ஒருவேளை பணம் கொடுத்து டெஸ்டை கரெக்ட் செய்ய நேரம் எடுக்கிறாரோ? எல்லாத்தையுமே சட்டப்படி எதிர்கொள்ளும் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களே, இதை மட்டும் ஏன் உங்களால் சட்டப்படி கையாள முடியவில்லை?” என்று கூறியுள்ளார்.

இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி, ரசிகர்களிடையே விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. அத்துடன், சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்து, விமர்சனங்கள் மற்றும் meme களும் உருவாகி வருகிறது.
Listen News!