• Jan 19 2025

விஜயாவை 'வட்டிக்கடைக்காரி' என்ற ஸ்ருதி! முத்துவுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்த மீனா! ரோகிணி லைஃபில் என்ட்ரியான பூகம்பம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,அனைவரும் முன்னிலையும் மீனாவுக்கு தாலியை கொடுத்து சந்தோஷப்படுகிறார் முத்து. அதைப் போட்டுக்கொள்ள சொல்லும்போது, அதற்கு வேறு ஐடியா இருக்கு என்று மீனா சொல்கிறார்.

இதை தொடர்ந்து ரூமுக்கு சென்ற மீனா எப்படி இவ்வளவு பணம் வந்தது என விசாரிக்க, காரில் ஒருவர் பணத்தை விட்டுட்டு போயிட்டார் அந்த பணத்துல தான் வாங்கினேன் என்று சொல்ல, நீங்க அப்படி செய்ய மாட்டீங்க என்று மீனா சொல்கிறார்.

இதை அடுத்து ரோகினி ரூமுக்கு வந்த விஜயா, மீனா தான் காசு கொடுத்து இருப்பா, ஆனா இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறா, அவள விட நீ கூடுதலா நகை வாங்கி போடணும் அப்பாட்ட சொல்லு மாமா கிட்ட சொல்லு என்று விஜயா சொல்கிறார்.


விஜயா போன பின்னர், இவ என்ன எப்ப பார்த்தாலும் காசு, நக என்று சொல்லிட்டு இருக்கா.. என்று ரூமில் இருந்து புலம்பிய ரோகினி, அதன்பின் பிரண்டின் பாலருக்கு சென்று அவருக்கு நடந்தவற்றை சொல்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த நபர் ஒருவர், ரோகிணியிடம் காசு கேட்கிறார். மேலும் உன்னால தான் என் குடும்பம் பிரிந்தது என்று சொன்னதோடு, கல்யாணி எங்க மலேசியா போனியா? அங்க தான் உனக்கு யாரும் இல்லையே.. உன் புருஷன் ஊருக்கு காசு கேட்டு வந்து இருப்பன்.. பாவம் என்று தான் வரல என உண்மைகளை சொல்கிறார். மீண்டும் அவர் பணம் கேட்க,  ரோகிணி அவரிடம் 2 நாள் டைம் கேட்கிறார்.

இதையடுத்து, முத்துவை காரில் அழைத்துச் சென்ற மீனா, அவரை சர்ப்ரைஸ்ஸாக கோவில் ஒன்றுக்கு அழைத்து செல்கிறார். அங்கு மீனாவின் குடும்பமும் நிற்கிறது. அங்கு போனதும் முத்துவுக்கு புது உடுப்பு வாங்கி கொடுத்து அதை மாற்றி விட்டு வருமாறு மீனா சொல்கிறார்.

என்ன என்று தெரியாமல், முத்துவும் ட்ரெஸ் மாத்திட்டு வர, எல்லாரும் கோவில் உள்ளே செல்ல, அங்கு பூசாரி முத்துவிடம் மீனாவை பற்றி புகழ்கிறார். எனினும், முத்துவுக்கு என்ன நடக்க போகிறது என்பது தெரியவில்லை. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement