• Dec 02 2024

சொந்த படத்தில் என் கணவருக்கு ஜோடியா நடிக்க போறேன்.. ‘லால் சலாம்’ நடிகை பேட்டி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

’லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை நிரோஷா விரைவில் சொந்த படம் எடுக்க போவதாகவும் அந்த படத்தில் தனது கணவர் ராம்கிவுடன் நடிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் எம்ஆர் ராதாவின் மகளும், நடிகை ராதிகாவின் சகோதரியுமான நிரோஷா கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிரோஷாவுக்கு இரண்டாவது படமே கமல்ஹாசன் உடன் ’சூரசம்காரம்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.



அதன் பின்னர் விஜயகாந்த் நடித்த ’செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். ’பறவைகள் பலவிதம்’ உள்பட ராம்கி உடன் சில படங்கள் நடித்த நிலையில் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் அவர் தனக்கேற்ற கேரக்டரில் நடித்து வந்தார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். ’மேம் நீங்கதான் அப்பாவுக்கு ஜோடியாக நடிக்கிறிங்க’ என்று ஐஸ்வர்யா சொன்னவுடன் எனக்கு இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டது என்றும் அவருடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நான் என் கணவர் ராம்கி உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன் என்றும், அந்த படத்தை நாங்களே தயாரிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இரண்டு தமிழ் படங்களிலும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருவதாகவும் இந்த படங்களை முடித்துவிட்டு தனது சொந்த படத்தின் பணிகளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement