தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மட்டுமின்றி தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சித் தலைவராகவும் காணப்படுகிறார் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்று.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றார் விஜய்.
அந்த வகையில் தற்போது இரண்டாவது ஆண்டாக இந்த வருடமும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
கடந்த முறை சரியான திட்டமிடலின்மை நேர முகாமைத்துவம் இல்லாததன் காரணத்தால் காலையில் ஆரம்பமாக அந்த நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நீடித்து நடிகர் விஜய் கால் கடுக்க நின்று டயட் ஆகிப்போனார்.
ஆனால் இந்த முறை அவ்வாறு நடக்காமல் இருக்க தீவிர ஏற்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்த முறை விருது வாங்க வருபவர்கள் செல்போன், கேமரா, பென் கூட கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விருது விழாவுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவர்களிடமிருந்து குறித்த பொருட்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, விழா முடிந்ததும் அவற்றை மீண்டும் பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒழுங்குப்படுத்தி வருகின்றார்கள். இந்த முறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பிலான வீடியோக்களும் புகைப்படங்களும் செய்திகளும் வைரலாகி வருகின்றன.
இதேவேளை, கடந்த வருடம் விஜய் நிவாரணம் வழங்கும் போது அங்கு வந்த யுவதிகளில் சிலர் நிவாரணம் வேண்டாம், செல்பி மட்டும் போதும் என கேட்டு வாங்கி சென்றதும், இந்த முறை அந்த விளையாட்டுக்கு எல்லாம் இடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!