• Sep 16 2024

எஸ்கேயின் சில்லறைத் தனங்களை புட்டுபுட்டு வைத்த ப்ளூ சட்டை!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில்  பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் திரைப்படம்  தான் கோட். இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படம் முதல் நாளில் மட்டும் 126 . 32 கோடிகளை வசூலில் அள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் 100 கோடி ரூபாயை தாண்டுவதற்கு பெரிதும் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதலாவது நாளிலேயே அசால்டாக நூறு கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

இந்த நிலையில், கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சிவகார்த்திகேயன் தொடர்பில் நீண்ட பதிவுகளை தனது எக்ஸ் தல  பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அதாவது இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லன் கேரக்டரை சிவகார்த்திகேயனிடம் ஒப்படைத்த விஜய் அவரை தப்பிக்காத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறுவார். தொடக்கத்தில் பயத்தை காட்டிய சிவகார்த்திகேயன் அதன்பின்பு விஜய் இடம் நீங்க இதைவிட ரொம்ப முக்கியமான வேலையாக போறீங்க போல... நீங்க அதை பாருங்க நான் இதை பார்த்துக் கொள்ளுகின்றேன் என கூறுவார்.


சிவகார்த்திகேயனின் இந்த வசனம் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவதை குறிபதாகவும், தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் தான் அவருடைய இடத்தை நிரப்ப போறதாகவும் மறைமுகமாக கூறுவதாக இணையதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான் ப்ளூ சட்டை மாறன் அதில், நான் பார்த்துக்கிறேன் என்றால் விஜய் இடத்திற்கு வரப்போகின்றேன் என்கின்றாரா? பலருக்கும் ரஜினி, விஜய் ஆக ஆசை ஆனால் அவர்களுடைய இடத்தை பிடிக்க ரஜினிக்கு 50 ஆண்டுகள் ஆகும் விஜய்க்கு 30 ஆண்டுகள் ஆகியுள்ளது.

மேலும் முதலில் ரஜினியாக முயன்று ரஜினி முருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என்ற தலைப்பில் டைட்டில் வைத்தீர்கள். ஜெயிலரில் ரஜினி மகன் கேரக்டரில் நடிப்பதற்கு கடுமையாக முயன்றீர்கள். ஆனாலும் தலைவர் நோ சொல்லி அலர்ட் ஆகிவிட்டார்.

ரஜினியை பின்பற்றி இந்த தலைமுறையை கவரலாம் என்று நினைத்தீர்கள். ஆனால் அது இயலாது என்பதால் இப்போது விஜய் பக்கம் தாவி உள்ளீர்கள். விஜய் அரசியலுக்கு சென்றாலும் அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. ஆகவே இருக்கும் இடத்தை தக்க வைத்து முன்னேறுவதே சாமர்த்தியம். குட்டி தல, சின்ன தளபதி என்று கனவு அர்த்தமற்றது எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement