• Jan 19 2025

விஜய்யைவே வெயிட்டிங் பண்ண வச்சவர்.. ‘எஸ்கே 23’ படத்தின் மாஸ் வில்லன் அறிவிப்பு..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் மாஸ் வில்லன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வரும் நிலையில் மேலும் முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்க வித்யூத் ஜம்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’துப்பாக்கி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்றும் ’துப்பாக்கி’ படத்தின் இன்டெர்வல் காட்சியில் ’வெயிட்டிங்’ என விஜய்யைவே சொல்ல வைத்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி வெற்றி படத்திற்கு பிறகு சூர்யாவுடன் ’அஞ்சான்’ படத்தில் நடித்த வித்யூத் ஜம்வால் தற்போது மீண்டும் தமிழில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டதாகவும் இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த படத்தை முடிந்து விட்டு சல்மான் கான் நடிக்க இருக்கும் ’சிக்கந்தர்’ படத்தின் படத்துக்கு ஏஆர் முருகதாஸ் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement