• Jan 19 2025

மீனா தங்கச்சி சீதாவுக்கு கிடைத்த ரகசிய சினேகிதன்.. சீக்கிரமே நல்ல செய்தி சொல்வார்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியலில் உள்ள சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட வலுவான காட்சிகள் இருப்பதுதான் இந்த சீரியல் பிரபலம் அடைந்து வருவதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் நட்சத்திரங்கள் கூட சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளனர்.

அந்த வகையில் இந்த சீரியலில் மீனா கேரக்டரின் தங்கச்சியாக சீதா கேரக்டரில் சங்கீதா லியோனிஸ் நடித்து வரும் நிலையில் அவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வார் என்பதும், அவரது ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் அந்த வீடியோவுக்கு லைக் பதிவு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்தது.

மேலும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவுக்கு கூட கிடைக்காத சினிமா வாய்ப்பு சீதாவுக்கு கிடைத்துள்ளது என்பது சமீபத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் நாயகி ஆக அறிமுகமாகி நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’ரகசிய சினேகிதனே’ என்ற ஆடியோ சீரியஸில் பங்கு கொண்டுள்ளார். இது குறித்த அறிமுக விழா சமீபத்தில் நடந்த போது சங்கீதா அதில் குழுவினர்களுடன் கலந்து கொண்டார். மேலும் இந்த சீரியலின் இயக்குனர் வினோத் நாதன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ள சங்கீதா லியோனிஸ் ’தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மிகப்பெரியது’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டீமுடன் பணி செய்வது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பதிவு செய்து சில புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் .தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு இயக்குனர் வினோத் நாதன் கமெண்ட் பகுதியில் ’நீங்கள் ஒரு இனிமையான மற்றும் நல்ல கலைஞர், உங்களுடைய நடிப்பு மிக அபாரமாக இருந்தது, உங்களுடன் பணி செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது, உங்களுடன் மீண்டும் பணி செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார். ’உங்களுடைய பாராட்டுக்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’ என்றும் சங்கீதா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். எனவே சங்கீதா சீக்கிரமே இன்னொரு சீரியலில் நடிக்க போகும் நல்ல விஷயத்தை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement