• Dec 18 2025

முட்டாள் தனமான முடிவெடுத்த சீதா.. மனோஜுக்கு வந்த போன் கால்.? வசமாக சிக்கிய ரவி

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  அருண் சொன்னதை நம்பி  முத்துவின் உறவு எனக்கு வேண்டாம் என்று சொல்லுகின்றார் சீதா. ஆனால் மீனாவுடன் கதைப்பதாக சொல்ல, முத்து வேற நான் வேற இல்லை  உனது விருப்பம் என்று  மீனா பதிலடி கொடுக்கிறார்.  

இதையடுத்து, மனோஜ் ஆபீஸில் இருக்கும்போது க்ரிஷின் ஆசிரியர் அவருக்கு கால் பண்ணி, இந்த முறை பள்ளியில் முதல் ரேங்க் க்ரிஷ் எடுத்திருப்பதாகவும், அவனுக்கு செர்டிபிகேட் கொடுக்க  நீங்கதான் வரவேண்டும், அதைத்தான் க்ரிஷ் விரும்புகின்றான் என்றும் சொல்லுகின்றார். 

இதனால் மனோஜ்  போவதற்கு ரெடியாக,  ஜீவா  இப்படியே போனீங்க என்றால் அது நாளை பழக்கம் ஆயிடும் என்று ஆப் பண்ணுகிறார்..  ஆனாலும் அங்கிருந்த ரோகிணி நீங்க ஆபீஸ் விஷயத்தை மட்டும் பாருங்க பர்சனல் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லுகின்றார். 


அதன்பின், க்ரிஷை அழைப்பதற்காக ரோகிணியும் மனோஜும்  செல்ல, அங்கு ஏற்கனவே மீனாவும் முத்துவும் இருக்கின்றார்கள்.  இறுதியில் மனோஜ் ரோகிணியும் க்ரிசை அழைத்துச் செல்கின்றனர். இதனால் முத்து மனதுடைந்து போகின்றார். 

இதையடுத்து தான் வெற்றி பெற்றதாக சந்தோசத்துடன் வருகின்றார் ரவி.  வீட்டிற்கு வந்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிஃப்ட் கொடுக்கிறார். இறுதியில்  தனது சூட்கேசை திறந்து ஆடைகளை எடுக்க,  அங்கு நீத்துவின் டிரஸ் வருகின்றது. இதை பார்த்து ஸ்ருதி டென்ஷன் ஆகின்றார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement