விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனில் தற்போது 12 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர்.
இந்த சீசனில் ஆரம்பத்தில் சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் போட்டியாளராக பங்கு பற்றினர். இதனால் இந்த சீசன் டல் அடிப்பதாக பேச்சு உலா வந்தது. அதற்குப் பிறகு அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.
ஆரம்பத்தில் இவர்களுடைய ஆட்டம் சூடு பிடித்தது. ஆனால் நாளடைவில் இவர்களும் சகப் போட்டியாளர்களைப் போல இருக்கும் இடம் தெரியாமல் இருந்தனர். இறுதியில் பிக் பாஸ் ஆட்டத்தை குழப்புவதற்காக ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியேறிய ஆதிரையை உள்ளே இறக்கினார். இதனால் மீண்டும் சண்டை, சச்சரவு என பிக் பாஸ் இல்லம் ஆட்டம் காண ஆரம்பித்தது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரஜின் எலிமினேட் ஆனதற்கு பிறகு அவருடைய மனைவி சாண்ட்ரா அழுது புலம்பி வருகின்றார். தற்போது வெளியான ப்ரோமோவில் திவ்யாவை பற்றி புறம் பேசுகின்றார் .
கடந்த சில நாட்களாகவே வெளியிடப்படும் ப்ரோமோக்களில் சாண்ட்ரா அழுது புலம்பும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இவர் பிரஜின் வெளியேறியதால் தன்னை பற்றி ஒரு சிம்பதி கிரியேட் பண்ண பார்க்கின்றாரா என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், திவ்யாவை வைத்து ஒண்ணுமே பண்ண முடியாது என்று அமித் கூற, அவங்க பார்வதியின் ரூட்டினை எடுத்துட்டாங்க.. கத்துறது, சண்டை போடுறது என்று சாண்ட்ரா சொல்லுகின்றார்.
Listen News!