சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல், இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றது. இந்த சீரியலில் நாயகனாக அமல் ஜித் நடித்து வருகின்றார். மேலும் அவருக்கு ஜோடியாக மனுஷா மகேஷ் நடிக்கின்றார்.
இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சீரியலில் அண்மையில் தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது ஹனிமூன் கொண்டாட கொடைக்கானல் சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகர் அமல் ஜித்துக்கு சீரியலில் கல்யாணம் ஆனது போலவே விரைவில் நிஜத்திலும் கல்யாணம் நடைபெற உள்ளதாம். இவர் கேரளாவை சேர்ந்தவர். சிங்கப்பெண்ணே சீரியல் மூலம் தான் பட்டித்தொட்டி எங்கும் பேமஸானார். ஏற்கனவே இவர் அம்மன் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த பவித்ரா என்பவரை தான் காதலித்து வருகின்றாராம். இவர்கள் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இவர்களுடைய திருமண பேச்சு இன்ஸ்ராவில் வைரலாகி வருகின்றது. சின்னத்திரையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாற இருக்கும் அவர்களுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!