• Mar 29 2025

பிளாட்பாரத்தில் இட்லிக்கடை வச்சிட்டாரா ‘சிறகடிக்க ஆசை’ செல்வம்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்சிறகடிக்க ஆசைஎன்ற சீரியல் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் இந்த சீரியலில் உள்ள அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது அதுதான் இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தமிழ் மட்டுமின்றி தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும்சிறகடிக்க ஆசைரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இந்தி மற்றும் மராத்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்சிறகடிக்க ஆசைசீரியலில் முத்து கேரக்டரின் நண்பராக செல்வம் என்ற கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாட்பாரத்தில் உள்ள கடையில் இட்லி சட்டியில் மாவு ஊத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பிளாட்பாரத்தில் இட்லி கடை ஆரம்பித்து விட்டீர்களா என்று கேட்டதற்கு அவர் இட்லி கடை நடத்துபவருக்கு உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள இந்த பிளாட்பார இட்லி கடைக்கு நட்புக்காக உதவி செய்வதாக அவர் கூறிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது


Advertisement

Advertisement