• Apr 14 2026

’சிங்கம் 4’ அப்டேட் கொடுத்த ஹரி.. அதிருப்தியில் சூர்யா ரசிகர்கள்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்தசிங்கம்திரைப்படம் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி மூன்றுமே ஹிட் ஆகியுள்ள நிலையில் இதன் நான்காம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்சிங்கம் 4 ’ குறித்து இயக்குனர் ஹரி கொடுத்த அப்டேட் சூர்யா ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது.

 
சூர்யா, அனுஷ்கா நடிப்பில், ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவானசிங்கம்படத்தின் முதல் பாகம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டில், மூன்றாம் பாகம் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த நிலையில் 7 ஆண்டுகள் ஆகியும் இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த எந்தவித தகவலும் இல்லை.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா மற்றும் ஹரி இணையும் படம் ஒன்றின் அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படம் தான்சிங்கம் 4’ படம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு செல்லும் முன் திடீரென ஹரி - சூர்யா இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போதுரத்னம்படத்தை இயக்கி முடித்துள்ள ஹரியின் அடுத்த படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதுசிங்கம் 4’ படம் குறித்து என்னை அனைவரும் கேள்வி கேட்டு வருகிறார்கள், ஆனால் அந்த படத்திற்காக நான் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. ஏற்கனவே மூன்று பாகங்கள் ஹிட் ஆகியுள்ளதால் நான்காம் பாகத்தையும் ஹிட்டாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இருப்பினும்சிங்கம் 4’ எப்போது உருவாகும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும், இப்போதைக்கு அந்த ஐடியா இல்லைஎன்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

Advertisement

Advertisement