• Jun 18 2024

நீங்க மூணு பேரும் சேர்ந்து முத்து-மீனாவை என்ன பண்ண போறீங்கன்னு தெரியலையே.. சத்யா வீடியோ வைரல்..!

Sivalingam / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தான் சத்யா ஓரளவு திருந்தி இனிமேல் அக்கா மாமா விஷயத்தில் தலையிடக்கூடாது என சிட்டியிடம் கூறும் காட்சிகள் நேற்றைய எபிசோடில் இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் முத்துவை எப்படியாவது மாட்டி வைக்க வேண்டும் என்பதற்காக ரோகிணியை மிரட்டிய நபரை தன்னிடம் வரவழைத்த சிட்டி அதற்காக பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பிளான் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் தம்பி சத்யா கேரக்டரில் நடித்து வரும் திவாகர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் முத்துவின் நண்பர் செல்வம், சிட்டி மற்றும் ரோகிணியை மிரட்டியவர் ஆகிய மூவரையும் தனது நண்பர் என்று கூறியுள்ளார்.

‘என்ன பண்ண போறாங்களோ’ என்ற கேப்ஷனுடன் உள்ள இந்த வீடியோவில் ’எனக்கு மொத்தம் மூன்று நண்பர்கள், ஒருத்தன் என் வாழ்க்கையில் எப்படி வந்தான்னே தெரியல, இன்னொருத்தன் என் வாழ்க்கையில எதுக்கு இருக்கான்னே தெரியல, கடைசியா ஒருத்தன் இன்னும் என்னவெல்லாம் என் வாழ்க்கையில பண்ண போறான்னு தெரியல’ என்று கூறியுள்ளார்.
 
இந்த வீடியோவுக்கு ’நீங்க எல்லாரும் சேர்ந்து எங்க முத்து மீனாவ என்ன பண்ண போறீங்கன்னு தெரியல, எங்களுக்கு வயித்துல புளியை கரைக்கிறது’ ’சத்யா நீங்க மாஸ் காட்டுறீங்க,உங்க மூணு பேரோட ஆக்டிங் போட்டி போட்டுக்கிட்டு சூப்பராக இருக்கிறது’ ’நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எங்க முத்து மீனாவ ஒன்னும் செஞ்சிடாதீங்க,  எங்க முத்து தான் பாவம் ’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement