• Jun 18 2024

நம்பவே முடியலை.. பிகினி உடையில் ‘தமிழும் சரஸ்வதியும்’ நடிகை.. திருமண நேரத்தில் இப்படி ஒரு போஸ்?

Sivalingam / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ உட்பட சில சீரியல்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகி உள்ளனர்.

வாய்ப்பு இழந்த நடிகைகள் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்கள் உள்பட சில கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வாய்ப்பு தேடி அலைந்து வரும் நிலையில் தற்போது சீரியல் நடிகைகளும் பிகினி உடை புகைப்படங்களை பதிவு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக, தொழிலதிபர்களாக, மதிப்பு மிகுந்த மனைவி கேரக்டரில் நடிக்கும் நடிகைகள் கூட நிஜ வாழ்வில் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள், நீச்சலுடை புகைப்படங்களை பதிவு செய்து வருவது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இதன் பின்னால் ஒரு பிசினஸ் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள கிளாமர் புகைப்படங்களை பார்த்து தான் அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் ’கண்ணான கண்ணே’ என்ற சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான நடிகை அக்ஷிதா போபையா அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற சீரியலில் மேக்னா என்ற தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவரது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

ஒரு தமிழ் சீரியல் ரசிகனாக இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்றும், நீச்சல் உடை என்பது ஒரு சில பெண்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும் உங்களுக்கு சூப்பராக இருக்கிறது என்றும், பழைய நினைவுகள் தனக்கு ஞாபகம் வருவதாகவும், இந்த புகைப்படத்தில் இருந்து வெளியே வரக்கூடாது முடியவில்லை என்றும், பல விதமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

மேலும் ஒரு சிலர் ’உங்களை நாங்கள் மிகவும் மரியாதையான இடத்தில் வைத்திருக்கிறோம் இப்படி எல்லாம் போஸ்ட் பண்ணி உங்கள் மரியாதை கெடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றும் அறிவுரை கூறியும் வருகின்றனர்.


Advertisement

Advertisement