• Jan 19 2025

கணவர் இறந்த 7 மாதத்தில் மீண்டும் நடிக்க வந்த நடிகை.. இன்று தொடங்கும் சீரியலில் எண்ட்ரி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

பிரபலமான பல சீரியல்கள் நடித்த நடிகையின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் கணவர் இறந்த 7 மாதத்தில் அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் ’நாதஸ்வரம்’ சீரியலில் திருமுருகன் சகோதரியாக நடித்திருந்தார் என்பது அதன் பின்னர் ’பாரதி கண்ணம்மா’ ‘வாணி ராணி’ ‘கல்யாண பரிசு’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து ஸ்ருதி திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்தனர். மேலும் திருமணத்திற்கு பின்னர் சீரியல்களில் நடிப்பதையும் அவர் நிறுத்திவிட்டார்



இந்த நிலையில் திடீரென ஸ்ருதி கணவர் அரவிந்த் சேகர் ஒர்க் அவுட் செய்யும் போது மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் ஸ்ருதி நொறுங்கி போய்விட்டார். கணவர் மறைவுக்கு பின்னர் அவருடைய ஞாபகமாகவே இருந்த ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் நடிப்பில் ஒளிபரப்பாக உள்ள 'லட்சுமி’ சீரியலில் நாயகி ஸ்ருதி ராஜ் தோழியாக ஸ்ருதி சண்முகப்பிரியா நடிக்கவுள்ளதாகவும், இனி அடுத்தடுத்து அவருக்கு அதிக சீரியல்களில் நடிக்க  வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கணவர் மறைவின் சோகத்தை மறப்பதற்காக மீண்டும் நடிக்க வந்துள்ள ஸ்ருதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement