• Mar 12 2025

ஷாக்கிங் கல்யாணமா..?5 ஆவது திருமணமா..? உண்மையை கூறிய சிறுத்தை சிவாவின் தம்பி..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

முன்னனி இயக்குநர் சிறுத்தை சிவாவினுடைய தம்பியும் சிறந்த நடிகருமாகிய பாலா தற்போது ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்று வைரலாகியுள்ளது. வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த இவர் குறித்து எழுந்துள்ள பல வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


குறித்த நேர்காணலில் அவரது இரண்டாவது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார்.அதில் நீங்க மாமா சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக சொல்ராங்க அது உண்மையா ? என கேட்டதற்கு அதில் என்ன தப்பிருக்கு அது உண்மையாக இருக்கலாம் என சிரித்தபடி கூறியுள்ளார்.


மற்றும் முன்னர் எல்லாம் பாலா 4 திருமணம் என பல தகவல்கள் வெளியாகின என்கின்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு நாலு இல்லைங்க ஜந்து என வேடிக்கையாக பதிலளித்துள்ளதுடன் இது என officially இரண்டாவது திருமணம் என கூறியுள்ளார். இதைவிட காதல் குறித்து இவர் "காதல் இல்லாமல் வாழ முடியாது அப்புடி வாழ try பண்ணீங்கன்னா உங்க வாழ்க்கையில சுவாரஸ்யமே இருக்காது "என மிகவும் அழகாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement