• Dec 05 2023

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சாலையில் பைக் ஓட்டிய நடிகர் தனுஷின் மகன்- போலீஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

stella / 2 weeks ago

Advertisement

Listen News!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


இவர் ரஜினியின் மகன் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.


18 வருடம் இணைந்து வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்த வருகின்றனர்.ஆனால் இன்னும் சட்டப்படி அவர்கள் விவாகரத்து பெறவில்லை என கூறப்படுகிறது.


இந்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா இன்னும் 18 வயதை தொடாத நிலையில் சாலையில் R15 பைக்கை ஓட்டி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இது சர்ச்சை ஆனது.தற்போது போலீசார் தனுஷ் வீட்டுக்கு சென்ற போக்குவரத்து போலீசார், யாத்ராவுக்கு 1000 ருபாய் அபராதம் விதித்து இருக்கின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement