• Apr 03 2025

சேச்சி, சேட்டம்மா... நீங்க வேற லெவலுங்க...!! மலையாளத்தில் 'ஹார்ட் டச்சிங் ஸ்பீச்' கொடுத்த தளபதி வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் பட திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவில் தொடர்கிறது. 

இதற்கான படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் அதே வேளையில், தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டாடியுள்ளார் விஜய்.

இவ்வாறு நேற்றைய தினம் தனது ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசிய விஜய்யின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில்,


எனது அன்பு சகோதர, சகோதரிகளே! எனது அருமை தாய்மார்களே!  உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஓணத்தின் போது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதுபோலவே எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. எல்லாருக்கும் கோடான கோடி நன்றிகள்.. தமிழ்நாட்டில் இருக்கும் எனது நண்பா, நண்பிகள் போல நீங்களும் வேற லெவலுக்கு உள்ளீர்கள். மீண்டும் சொல்கிறேன் உங்கள் அன்புக்கு கோடான கோடி நன்றிகள்.. என உருக்கமாக பேசி உள்ளார்.

இதேவேளை, நடிகர் விஜய் கேரளாவுக்கு தனி விமானத்தில் சென்றபோது அங்கு அவரை சூழ்ந்த கேரளா ரசிகர்கள், தடபுடல் ஏற்பாடுகளுடன் ஆர்ப்பரித்து வரவேற்றனர். அதேபோல கூட்ட நெரிசலில் விஜய் வந்த காரும் நொறுக்கப்பட்டது. இவ்வாறு தற்போது வரையில் கேரள ரசிகர்களின் அன்பில் மிதந்து வருகிறார் நடிகர் விஜய்.


Advertisement

Advertisement