• Apr 15 2026

கேரளாவுக்கு படையெடுத்த ரஜினி.. விஜய் தங்கிய அதே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம்..?? ஏன் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய், தற்போது கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளாவில் தனது படப்பிடிப்புகளை முன்னெடுத்து வருகிறார். அத்துடன் கேரளா ரசிகர்களுடன் தனது நேரத்தையும் செலவிட்டு வரும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி  உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'வேட்டையன்' படபிடிப்பிற்காக நாளைய தினம் கேரளா கிளம்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் நடிகர் விஜய் தங்கியுள்ள அதே நட்சத்திர ஹோட்டலில் தான் நடிகர் ரஜினிகாந்தும் தங்க உள்ளாராம். 

ஆகவே விஜய்யும் ரஜினிகாந்த்தும் இதன் போது நேரில் சந்தித்துக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் காணப்படுகிறது.


ஏற்கனவே காக்கா -பருந்து கதைகளுக்கு முட்டிக்கொண்டார்கள் விஜய், ரஜினி ரசிகர்கள். இதனை விழா ஒன்றில் வன்மையாக கண்டித்தும் இருந்தார் ரஜினி.

இவ்வாறான நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கேரளாவில் சந்தித்தால் அது நிச்சயமாக விஜய், ரஜினி ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட்டாக இருக்கும்.

இதேவேளை, நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு பொதுவெளியில் ரஜினியும் விஜய்யும் சந்தித்துக் கொள்ளும் முதலாவது தருணமும் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement