• Apr 01 2025

சத்யா போட்ட ஸ்கெட்ச் -ல் மாட்டிய முத்து! மீனா எடுத்த முடிவு? பூகம்பமாய் வெடித்த புதிய பிரச்சினை? புதிய திருப்பத்தில் சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிடல் இருக்கும் சத்யாவை பார்ப்பதற்காக முத்து வர, நீங்க எதற்கு இப்போ இங்கே வந்தீங்க? உங்க பிரண்டா அடிச்சதால  என்ன அடிச்சிங்களா? என சத்யா கேட்க, நான் அதுக்காக தான்  அடிச்சேன்னு நினைச்சியாஎன்று, விஜயாவிடம் பணத்தை திருடிய சத்யாவின் வீடியோவை காட்டுகிறார்.

மேலும், என்ன மாட்டிக்கிட்டோமே என்று பயமா இருக்கா? என்று முத்து கேட்க, இதுல என்ன இருக்கு, இங்க எல்லாமே பணம் தான் என கொஞ்சமும் திருடிய பயம் இல்லாமல் சத்யா சொல்கிறார் 


இந்த விஷயம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? என முத்து கேட்க, என்ன மிரட்டுறீங்களா? எனக்கு ஒன்னும் பயம் இல்லை. போய் சொல்லுங்க என்று சத்யா சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து ஹாஸ்பிடல் வந்த மீனா, உனக்கு எப்படி கை உடைந்தது என்று கேட்டு சத்யாவை அடிக்கிறார். 

அதற்கு மாமா தான் என் கைய ஒடச்சாரு, குடிச்சிருந்தார் என்று  நினைக்கிறேன் அப்படின்னு சத்யா சொல்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனா, எதுக்கு என் தம்பிய  அடிச்சீங்க? என்று முத்துவுடன் சண்டை போடுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement