பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் கிட்ட அரசி இந்த புத்தகத்தில கொஞ்சம் டவுட் இருக்கு சொல்லித்தாறீங்களா என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் தான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் அண்ணி கிட்ட கேளு என்கிறார். அதைக் கேட்ட மீனா அப்புடி என்ன பிஸி டான்ஸ் வீடியோ ஏதும் பார்த்துக் கொண்டிருக்கீங்களா என்று கேட்கிறார். அதுக்கு செந்தில் அப்புடி எல்லாம் ஒன்னும் இல்ல என்கிறார்.
அதைத் தொடர்ந்து பாண்டியனும் அங்க வந்து அரசியை பார்த்து நல்ல படியா படிக்கணும் என்று சொல்லுறார். பின் பாண்டியன் கோமதியை பார்த்து எவளா பணம் இருக்கு என்று கேட்கிறார். அதுக்கு கோமதி 62000 தான் இருக்கு என்கிறார். இதனைக் கேட்ட மீனா மாமா நீங்க கொடுத்த 10 லட்சம் அப்புடியே தான் இருக்கு தேவையென்றால் எடுத்துக்கொள்ளுங்க என்று சொல்லுறார்.
அதுக்கு பாண்டியன் அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்கிறார். அதைத் தொடர்ந்து செந்தில் மீனாவைப் பார்த்து எதுக்காக நீ அப்பா கிட்ட இப்புடி எல்லாம் சொன்னீ என்று கேட்கிறார். மேலும் செந்தில் நாம போய் தனியா இருப்போம் என்கிறார். பின் மீனா நான் தனியா போய் எல்லாம் இருக்க மாட்டேன் இந்தக் கதையை விடுங்க என்று சொல்லுறார்.
அதனை அடுத்து மயிலோட அப்பா பாண்டியன் கடையில இருந்து தங்கட வீட்டிற்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போறார். அதைப் பார்த்த சரவணன் கோபப்படுறார். பின் கதிர் நைட் டிரைவர் யாரும் இல்ல என்று சொல்லிட்டு தானே கார் ஓட்டிக் கொண்டு போறேன் என்கிறார். அதுக்கு ராஜி அப்புடி எல்லாம் போக வேணாம் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!