• Nov 23 2025

திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் சூர்யா மகள்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.!!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, தனது நடிப்பின் மூலம் மட்டுமல்லாது சமூகப்பணிகளாலும் பிரபலமானவர். இப்போது அவரது குடும்பத்தில் இருந்து இன்னொரு "லைட்" பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது. அது இவரது மகள் தியா சூர்யா தான்.


சிறந்த திரைக்கதைகள் மற்றும் சினிமா தொழில்நுட்பம் என்பவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "Leading Light" என்ற ஆவணப்படம், தியாவின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த ஆவணப்படம், தற்போது ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் நோக்கில், கலிபோர்னியாவின் Regency Theatres-ல் செப்டெம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை திரையிடப்பட உள்ளது.


இந்த ஆவணப்படம், பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தியா இந்த ஆவணப்படம் மூலம் புதிய பார்வையுடன், சினிமாவின் எதிர்பாராத பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement