சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி மீனா கிட்ட ரெஸ்டாரெண்ட் ஓப்பனிங் பக்கத்தில வந்திட்டு ஆனா chef கிடைக்கல என்று சொல்லி கவலைப்படுறார். அதுக்கு மீனா அதெல்லாம் நல்ல ஆளா கிடைப்பாங்க நீங்க கவலைப்படாதீங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து மீனாவோட சூப்ப ஸ்ருதி குடிச்சு பார்த்திட்டு சூப்பரா இருக்கு நீங்களே என்ர ரெஸ்டாரெண்டுக்கு chef-ஆ வாங்க என்று சொல்லுறார்.
மீனா அதெல்லாம் தனக்கு வராது என்று சொல்லுறார். மேலும் ஸ்ருதியையும் ரவியையும் சேர்ந்து அந்த வேலையைப் பார்க்கச் சொல்லுறார் மீனா. அதைக் கேட்ட ரவி சந்தோசப்படுறார். அதைத் தொடர்ந்து ரவி மீனா கிட்ட போய் ஸ்ருதி கிட்ட அப்புடி கதைச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா நீங்க கொஞ்சம் ஸ்ருதிக்கு சப்போர்ட் பண்ணுங்க என்கிறார்.
அதனை அடுத்து விஜயா நம்ம வீட்டில டாக்டர் பட்டம் வாங்கிற அளவுக்கு திறமை மனோஜுக்கு மட்டும் தான் இருக்கு என்கிறார். அதைக் கேட்ட முத்து ஷாக் ஆகுறார். அந்த நேரம் பார்த்து மனோஜ் அடிபட்டு வந்து நிக்கிறார். அதைப் பார்த்த விஜயா என்னாச்சு என்று கேட்கிறார். பின் மனோஜ் நடந்த உண்மையை சொல்லாமல் கதையை மாத்தி, நான் சண்டை போட்டேன் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட முத்து இதையெல்லாம் நம்பமுடியாமல் இருக்கு என்கிறார். பின் ரோகிணியும் நீ சொன்னதை நம்ம முடியாமல் இருக்கு நடந்த உண்மையை சொல்லு என்று கேட்கிறார்.இதனை அடுத்து மனோஜ் நடந்த எல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி கோபப்படுறார். பின் விஜயாவோட யோகா கிளாஸில பார்வதிக்கு பிறந்தநாள் கொண்டாடுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!