பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாட்டி கதிர் கொடுத்த போட்டோவைப் பார்த்து அழுது கொண்டிருப்பதைப் பார்த்த சக்திவேல் நல்ல விசேஷத்துக்கு எங்க அம்மாவ அழ வைக்க என்றே வருவீங்களா என்று கேட்கிறார். அதைக் கேட்ட பழனி அண்ணா நல்லா பாரு அது ஆனந்தக் கண்ணீர் என்கிறார். அதனை அடுத்து கதிர் குடும்பத்தில இருக்கிற எல்லாரும் ஒன்னா இருக்கிற மாதிரியும் போட்டோ பிரேம் செய்து பாட்டி கிட்ட கொடுக்கிறார்.

அதைப் பார்த்து அங்கிருந்த எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் பாட்டி ரெண்டு வீட்டு ஆட்களும் சேர்ந்து ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்கிறார். இதனை அடுத்து எல்லாரும் போட்டோ எடுக்க சம்மதிக்கிறார்கள். பின் மயில் சரவணன் கிட்ட போய் சாப்பாடு சரியான நேரத்துக்கு வந்திடுமா என்று கேட்க சரவணன் தன்னட்ட எதுவும் கேட்க வேணாம் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார்.
மறுபக்கம் கதிரும் ராஜியும் தனியா செல்பி எடுத்து அப்புடியே ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அப்ப கதிர் ராஜியோட புடவை நல்லா இருக்கு என்கிறார். இவங்க ரெண்டு பெரும் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிற நேரம் பார்த்து பாட்டியோட கோமதியும் அங்க வந்து கதிரையும் ராஜியையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து குமார் கதிர் கொடுத்த போட்டோவை எடுக்கிறதை பார்த்த சரவணன் எதுக்காக அதில கை வைக்கிற என்று கேட்கிறார். பின் பாட்டி எல்லாரோடையும் சந்தோசமா கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!